29.3 C
Jaffna
March 29, 2024
கிழக்கு

காரைதீவு, சாய்ந்தமருதில் பொலிஸ் நிலையம் இன்றுமுதல் உதயமானது

காரைதீவு பிரதேச செயலக பிரிவுக்கான பொலிஸ் நிலையம் கடற்கரை வீதியிலும், சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவுக்கான பொலிஸ் நிலையம் அல்- ஜலால் பாடசாலைக்கு முன்னாலும் இன்று காலை கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் கமல் சில்வாவினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட மற்றும் பிராந்திய பொலிஸ் உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பிரதம பொலிஸ் பரிசோதகர்கள், பள்ளிவாசல்களின் தலைவர்கள், ஆலய பரிபாலன சபையினர், மதகுருமார்கள், கிராம சேவகர்கள், ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் பௌத்த, இஸ்லாமிய, ஹிந்து மதகுருமார்களின் ஆசியுடன் இந்த பொலிஸ் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வுகளின் நினைவாக அதிதிகளினால் மரக்கண்டுகள் நடப்பட்டதுடன் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா குறிப்பேட்டிலும் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனை அநீதிக்கு எதிராக 5வது நாளாக போராட்டம்!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

மருதமுனை மதரஸாவில் கொடூரம்!

Pagetamil

கல்முனையில் தமிழர்களுக்கு எதிரான அநீதி: மீண்டும் வெடித்தது போராட்டம்!

Pagetamil

ஆற்றில் குதித்த திருடன்: ட்ரோன் உதவியுடன் தேடுதல்!

Pagetamil

Leave a Comment