குற்றம்

10 வருடமாக நடந்த பாதகம்: பக்கத்து வீட்டுக்காரரிடமிருந்து பாதுகாப்பு கோரி பொலிசில் தஞ்சமடைந்த யுவதி!

மாலபே, கஹந்தோட்ட பகுதியில் 22 வயது யுவதியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தொழிலதிபரை இந்த மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கடுவெல நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துகிரிய பொலிஸ் நிலையத்தில் யுவதி அளித்த புகாரைத் தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

களுபோவில மருத்துவமனையில் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் யுவதி சுமார் பத்து ஆண்டுகளாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யுவதியும் சந்தேகநபரும் அண்டை வீட்டாராக இருப்பதால், சிறுமியாக இருக்கும் போது அயலவரால் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளார். பெற்றோர் வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது சிறுமியை பாதுகாப்புக்காக சந்தேக நபரின் வீட்டில் தங்க வைத்துள்ளனர்.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகம் நடந்துள்ளது.

சந்தேக நபர் இரண்டு திருமணம் செய்துள்ளார். அவருக்கு பிள்ளைகளும் உள்ளனர்.

அந்த நபரின் துன்புறுத்தலிருந்து பாதுகாப்பு கோரி சிறுமி பொலிஸ் நிலையத்தை அணுகியிருந்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

சக மாணவியை வீடியோ எடுத்து மிரட்டி துஷ்பிரயோகம் செய்த 15 வயது மாணவர்கள் இருவர் கைது!

Pagetamil

வவுனியாவில் மரை இறைச்சி சாப்பிட ஆசைப்பட்டவர்களிற்கு நேர்ந்த கதி!

Pagetamil

மரண வீட்டுக்குள் நுழைந்து திருடிய தம்பதி கைது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!