Site icon Pagetamil

‘பறந்தா செல்வது வீடுகளிற்கு?’: சண்டிலிப்பாய் பிரதேச செயலக வாயிலை முற்றுகையிட்டு கல்லுண்டாய் மக்கள் போராட்டம்!

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தை வாயிலை மறித்து கல்லுண்டாய் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லுண்டாயில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளை சுற்றி மழைக்காலங்களில் வெள்ளம் தேங்குவதால், அந்த பகுதியை மண் போட்டு உயர்த்தி தரும்படி கோரியிருந்தனர். அந்த கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

அத்துடன், வேறும் சில கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த மே 10ஆம் திகதியும் இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கொரோனா நிலவரத்தை காரணம் காட்டி பொலிசார் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில் இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பறந்தா செல்வது வீட்டுக்கு என எழுதிய பதாதைகள் உள்ளிட்ட பல்வேறு பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

மே 10ஆம் திகதி போராட்டத்திற்கு வந்த மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

Exit mobile version