யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலராக பணியாற்றிய போது கொல்லப்பட்ட பொலிஸ் சார்ஜென்ட் ஜி.எச்.சரத் ஹேமச்சந்திரவின் நான்வது ஆண்டு நினைவு இன்று (22) ஆகும்.
நீதிபதி இளஞ்செழியன் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றிய போது, அவரது மெய்ப்பாதுகாவலர் ஹேமச்சந்திர உயிரிழந்தார்.
நல்லூர் பின்வீதியில் நீதிபதி பயணித்த போது, சச்சரவொன்றை அவதானித்த நீதிபதி, தனது மெய்ப்பாதுகாவலரை அந்த இடத்திற்கு அனுப்பிய போது, அவரது துப்பாக்கியை பறித்த ஒருவருடனான இழுபறியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்தார்.
அவரது மரணத்தை தொடர்ந்து, நீதிபதி இளஞ்செழியனின் உணர்ச்சிவசப்பட்ட பிரதிபலிப்பு ஊடகங்களிலும், சமூகத்திலும் அதிகமாக கவனிக்கப்பட்டது.
உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் பிள்ளைகளின் கல்வி செலவை நீதிபதி இளஞ்செழியன் ஏற்றுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்துவதை நீதிபதி இளஞ்செழியன் வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், நேற்று (21) தனது மெய்ப்பாதுகாவலரின் கல்றைக்கு அஞ்சலி செலுத்தினார்.