இலங்கை

வவுனியாவில் சிகையலங்கரிப்பு நிலையத்தைச் சேர்ந்த மூவர் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று!

வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியில் உள்ள சிகையலங்கார நிலையத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் இரவு (21) வெளியாகின.

அதில், காத்தார் சின்னக்குளம் பகுதியில் நான்கு பேருக்கும், மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த மூன்று பேருக்கும், கோமரசன்குளம் பகுதியில் ஒருவருக்கும், கணேசபுரம் பகுதியில் ஒருவருக்கும், சுந்தரபுரம் பகுதியில் ஒருவருக்கும் என 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

இன்றைய வானிலை!

Pagetamil

யாழ் பொலிஸ் நிலையத்திற்குள் மீண்டும் கொரோனா!

Pagetamil

யாழில் தவறி விழுந்து உயிரிழந்தவருக்கு கொரோனா!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!