குற்றம்

நீதிமன்றத்திற்கு வழக்கிற்கு வந்தவரின் மோட்டார் சைக்கிளை திருடியவர் சிக்கினார்!

மல்லாகம் நீதிமன்றுக்கு வழக்கு ஒன்றுக்கு வருகை தந்தவரின் மோட்டார் சைக்கிளைத் திருடியவர் தெல்லிப்பழை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட ஸ்கூட்டி மோட்டார் சைக்கிள் மற்றும் 4 துவிச்சக்கர வண்டிகள், 3 அலைபேசிகள், ஒரு வாள் என்பனவும் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மல்லாகம் நீதிமன்ற வீதியைச் சேர்ந்த ஒருவரே இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் மல்லாகம் நீதிமன்ற நடவடிக்கைக்காக வந்திருந்த ஒருவர் தனது 3 அலைபேசிகளை ஸ்கூட்டி மோட்டார் சைக்கிளின் இருக்கைக்கு கீழான தொட்டியில் வைத்து பூட்டிவிட்டு நீதிமன்றுக்குள் சென்றுள்ளார்.

வழக்கு முடிவடைந்து வெளியே வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளைக் காணவில்லை. அவர் தெல்லிப்பழை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கியிருந்தார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேக நபர் ஒருவரை இன்று கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட ஸ்கூட்டி மோட்டார் சைக்கிள் மற்றும் 4 துவிச்சக்கர வண்டிகள், 3 அலைபேசிகள், ஒரு வாள் என்பனவும் கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபருக்கு எதிராக கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகள் நீதிமன்றில் வழக்குகள் நிலுவையுள்ளன.

சந்தேக நபரிடமிருந்து திருட்டுப்பட்ட அலைபேசிகளை வாங்கி உடமையில் வைத்திருந்த மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் இருவரும் இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Related posts

வவுனியாவில் திருமணத்திற்கு சேர்க்கப்பட்ட நகைகள் கொள்ளை: படுத்துக் கொண்ட மோப்பநாய்!

Pagetamil

வீட்டுக்கு அருகில் புதைக்கப்பட்ட பெருந்தொகை பணத்துடன் மச்சான் சிக்கினார்!

Pagetamil

தொழிலதிபர் மரண மர்மம் துலங்கியது: உறக்கத்திலேயே மனைவியின் ஆலோசனையில் தலையணையால் அழுத்தி கொலை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!