சினிமா

தூக்கி வீசப்பட்ட விஷாலுக்கு முதுகில் காயம்; படப்பிடிப்பின் போது நிகழ்ந்த விபரீதம் (VIDEO)

நடிகர் விஷாலுக்கு படப்பிடிப்பின் போது  காயம் ஏற்பட்டு சிகிச்சை அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் மகனான விஷால், செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு போன்ற குடும்ப படங்களில் நடித்து மக்களிடம் வரவேற்பை பெற்றார்.

தொடர்ந்து சர சரவென்று 30 படங்களை நடித்த விஷாலின் கடைசியாக அயோக்கியா படத்தில் நடித்திருந்தார் விஷால். நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் அனைத்தையும் தாண்டி 2017ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் போட்டியிட்டார் விஷால். வேட்பு மனுத் தாக்கலை முறையாக பூர்த்தி செய்யாததால், அவரது மனு நிராகரிக்கப்பட்டது. தற்போது, எனிமி என்ற படத்தை நடித்து முடித்துள்ள விஷால், அடுத்ததாக புதுமுக இயக்குநர் து.ப.சரவணன் இயக்கும் பெயரிடப் படாத படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதில், மலையாள நடிகர் பாபு ராஜ்-உடன் எடுக்கப்பட்ட சண்டை காட்சியின் போது, விஷாலுக்க்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையாள நடிகர் பாபு ராஜ், விஷாலை தூக்கி எறியும் காட்சியை சதீஸ்வரன் என்ற பி.ஆர்.ஓ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு: கமல் இரங்கல்

Pagetamil

மகனின் முதல் பிறந்தநாளை மிகவும் எளிமையாக கொண்டாடிய இயக்குனர் விஜய்!

divya divya

100 kg எடையை குறைத்த கீர்த்தி சுரேஸ் அக்கா ரேவதி சுரேஸ்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!