இலங்கை

கொலைக்குற்றவாளி துமிந்த சில்வாவின் பொதுமன்னிப்பிற்கு எதிராக ஹிருணிகா உயர்நீதிமன்றத்தில் மனு!

பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் படுகொலை தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை மன்னிப்பளித்து விடுவித்தமை அரசியலமைப்பிற்கு முரணானது என அறிவிக்கக் கோரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மன்னிப்பு வழங்கும் ஜனாதிபதியின் உத்தரவை இரத்து செய்யுமாறு ஹிருணிகா பிரேமச்சந்திர உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கடந்த மாதம் பொது மன்னிப்பு வழங்கி விடுவித்திருந்தார்.

இந் நிலையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ வழங்கிய பொது மன்னிப்பின் சட்டபூர்வமான தன்மையை எதிர்த்து பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் புதல்வியான ஹிருணிகா பிரேமச்சந்திர, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

துமிந்தா சில்வாவுக்னா பொது மன்னிப்பு முடிவு நியாயமற்றது மற்றும் நீதிமன்றத்தின் அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்ட வழக்கில் துமிந்த சில்வா உட்பட ஐவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 2016 செப்டெம்பர் மாதம் மரண தண்டனை விதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Related posts

கடமையில் இல்லாத கிராம சேவகர்: பிரதேச செயலாளர் நேரடி ஆய்வு!

Pagetamil

நேற்று 1,895 தொற்றாளர்கள்!

Pagetamil

பொலிஸ் போக்குவரத்து சேவையை நவீனப்படுத்த அங்கீகாரம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!