முக்கியச் செய்திகள்

மாகாணங்களின் அதிகாரத்தை பறிக்கும் கோட்டா அரசின் நடவடிக்கைகளிற்கு எதிராக வழக்கு: தமிழ் மக்கள் தேசிய கூட்டணி அதிரடி நடவடிக்கை!

மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக தமிழ் மக்கள் தேசிய கூட்டணி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளது.

மாகாண அதிகாரங்களை பறிக்கும் அரசின் முயற்சிக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்படவுள்ளது.

மாகாண அதிகாரங்களை பறிக்கும் நடவடிக்கைகளில் அரசு சூட்சுமமாக செயற்பட்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாக, மாகாண அதிகாரங்களை இல்லாமல் செய்யும் நோக்கத்துடன் மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக்குகிறோம், மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டு வருகிறோம் என்ற கவர்ச்சிகரமான சுலோகத்தின் கீழ், அங்கஜன் இராமநாதன் போன்றவர்களை பயன்படுத்தி இந்த அதிகார பறிப்பு நூதனமாக இடம்பெற்று வருகிறது.

இதை புரிதாய பல தமிழர்கள், தேசிய பாடசாலை என்ற கவர்ச்சி வலையை அறியாமல் அதில் சிக்குண்டுள்ளனர்.

இப்படியான நெருக்கடியான சூழலில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஒரு வரலாற்று தேவையான நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

மாகாண அதிகாரங்களை பறிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளது.

இதற்கான முன்னாயத்த பணிகளில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி இறங்கியுள்ளது.

இதற்கான தொடர் சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக, இன்று ஓய்வுபெற்ற கல்விப்பணிப்பாளர்களுடன் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியினர் சந்திப்பில் ஈடுபட்டனர்.

நல்லூரிலுள்ள க.வி.விக்னேஸ்வரனின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

யாழில் 36 தொற்றாளர்கள்: வடக்கின் இன்றைய கொரோனா பரிசோதனை முடிவுகள்!

Pagetamil

11 நாளின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர்நிறுத்தம்!

Pagetamil

ஐபிஎல் 2021 தொடர் ஒத்திவைப்பு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!