இந்தியா

மதுபோதையில் காலில் விழுந்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!

கல்வி அலுவலர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின்போது, மதுபோதையில் காலில் விழுந்து இடையூறுசெய்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 14ஆம் தேதி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஐம்பத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள், முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் இரண்டுப்பேர் சாதியப் பாகுபாடுடன் செயல்படுவதைக் கண்டிக்கின்றோம் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின்போது, பாணாவாரம் அருகேயுள்ள காட்டுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியரான புவியரசன் என்பவர் மதுபோதையில் அங்குமிங்குமாக நடந்து இடையூறு செய்துகொண்டிருந்தார்.

திடீரென ஒருக்கட்டத்தில், காலணியை கழற்றிவிட்டு கண்டன உரையாற்றிக் கொண்டிருந்தவரின் காலில் விழுந்து வணங்கினார். கையெடுத்துக் கும்பிட்டார். குடிபோதையிலிருந்த தலைமை ஆசிரியரின் இந்தச் செயலால், மற்ற ஆசிரியர்கள் அதிருப்தியடைந்தனர்.

இந்த காட்சிகள் அங்கிருந்தவர்களால் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களில், வீடியோ வைரலானதால் கல்வித்துறை மீது கடும் விமர்சனம் எழுந்தது. இதுகுறித்து, விசாரணை நடத்தி அறிக்கை அனுப்ப அரக்கோணம் கல்வி மாவட்ட அலுவலர் ரமேஸுக்கு முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, கல்வி மாவட்ட அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை அனுப்பிய நிலையில், மதுபோதையில் காலில் விழுந்த தலைமை ஆசிரியர் புவியரசனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் முதன்மை கல்வி அலுவலர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 77 சதவீதம் பேர் 50வயதுக்கு மேற்பட்டவர்கள் ; சுகாதாரத்துறை தகவல்

divya divya

தமிழகத்தில் வங்கிகளின் வேலை நேரம் குறைப்பு: புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல்..!!

divya divya

கட்டுக்குள் வந்த கொரோனா ; விதிகளை பின்பற்றிய மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!