தனிமைப்படுத்தல் விதிமுறைகளைப் பயன்படுத்தி போராட்டங்களைத் தடுக்க பொலிஸ் மற்றும் சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக அறிவிக்கக் கோரி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று உயர் நீதிமன்றத்தில் ஒரு அடிப்படை உரிமைகள் மனுவை தாக்கல் செய்தார்.
பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசெல குணவர்தன, தலங்கம காவல்துறை ஓ.ஐ.சி, மிரிஹானா காவல் நிலையத்தின் ஓ.ஐ.சி, சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார்.
மனுவின்படி, ஜோசப் ஸ்டாலின் தொழில் ரீதியாக ஒரு ஆசிரியராவார். சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர் சேவையில் பணியாற்றி வருகிறார்.
உத்தேச கொத்தலாவெல பாதுகாப்பு பல்கலகழக சட்டமூலத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜூலை 8 ஆம் திகதி பத்தரமுல்ல சந்தியில் கூடியிருந்தனர்.
மனுதாரர் காலை 11 மணியளவில், பொலிஸார் எதிர்ப்பாளர்களைக் கலைக்க அதிகப்படியான சக்தியைப் பயன்படுத்தியதுடன் சுமார் 30 நபர்களை கைது செய்தனர்
கொழும்பு நீதிானினால் பிணையில் விடுவிக்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்னர் சுகாதார அதிகாரிகளின் எழுத்துமூல ஆவணம் அல்லது ஆன்டிஜென் சோதனை அல்லது பி.சி.ஆர் சோதனை எதுவும் இல்லாமல் முல்லைத்தீவிலுள்ள தனிமைப்படுத்தல் மையத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டதாக மனுதாரர் தெரிவித்தார்.