வட கடலில் 100 கிலோ கேரளா கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்களை கடற்படை கைது செய்துள்ளது.
காங்கேசந்ன்துறை கடற்பரப்பில் கடற்படையினர் நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது, 103.750 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் வந்த டிங்கி படகு கைப்பற்றப்பட்டதுடன், ஒரு டிங்கி படகும் பறிமுதல் செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
டிங்கி படகை கடற்படையினர் சோதனையிட தயாரான போது, படகிலிருந்த கஞ்சா பொதிகளை கடலில் வீசிவிட்டு மூவரும் தப்பிச் செல்ல முயன்றனர். எனினும், அவர்களை மடக்கிப் பிடித்த கடற்படையினர், கடலில் வீசப்பட்ட 3 பொட்டங்களையும் மீட்டனர்.
பருத்தித்துறை, கிளிநொச்சியை சேர்ந்த சந்தேகநபர்கள், 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
சந்தேகநபர்களும், படகும், கேரள கஞ்சாவும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை போலீசில் ஒப்படைக்க உள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
2
+1
+1
+1
+1
+1
1