25.7 C
Jaffna
November 29, 2021
இலங்கை

நாட்டில் ஒழுக்கம் கெட்டு விட்டது; 18 வயதானால் இராணுவப் பயிற்சிதான் சரி: வீரசேகர மீண்டும் விவகாரம்!

நாட்டில் சமீப காலமாக இளைஞர்களிடையே ஒழுக்கம் மோசமடைந்துள்ளதாகவும், ஒழுக்கமான சமூகத்தை உருவாக்க, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவ முகாம்களில் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

பாணந்துறை, அலுபோமுல்ல மற்றும் ஹிரன பொலிஸ் நிலையங்களை திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டபோது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

நம் நாட்டில் ஒழுக்கம் மோசமாகி வருகிறது, மிரட்டி பணம் பறிக்கும் நபர்கள், பாலியல் வன்கொடுமை செய்பவர்கள், பாதாள உலக மற்றும் குழந்தை மிரட்டி பணம் பறிப்பவர்கள் பற்றிய பயமும் சந்தேகமும் இல்லாமல் மக்கள் வாழ வேண்டும் என்றார்.

“18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்க வேண்டும் என்று நான் நாடாளுமன்றத்தில் சொன்னபோது,” நான் அவமதிக்கப்பட்டேன். இராணுவப் பயிற்சியென்பது அவர்களை இராணுவமாக மாற்றுவதென சிலர் விமர்சித்தனர்“ என்றார்.

18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு ஏதேனும் பயிற்சி அளிக்க முடியுமென்றால், அந்த பயிற்சி அளிக்க சிறந்த இடம் இராணுவ முகாம், ஏனெனில் அதற்கு ஒழுக்கமும் வசதிகளும் உள்ளன. ஆளுமையை மேம்படுத்தும் எந்தவொரு பாடநெறி அல்லது பயிற்சியும் படிப்படியாக சமூகத்தை ஒழுக்கமான அமைப்பாக மாற்றக்கூடும் என்று அமைச்சர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

யானை விவகாரத்தை சுட்டிக்காட்டிய இஷினி!

Pagetamil

UPDATE: யாழ் போதனாவில் 11 பேர்… நல்லூரில் 127 பேர்… மாநகரசபை உறுப்பினர்: யாழின் இன்றைய கொரோனா தொற்று விபரம்!

Pagetamil

வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய கொரோனா நோயாளி மடக்கிப்பிடிப்பு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!