26.2 C
Jaffna
February 17, 2025
Pagetamil
இலங்கை

வவுனியா பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தராக கலாநிதி த.மங்களேஸ்வரன் பதவியேற்பு

வவுனியா பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தராக கலாநிதி த.மங்களேஸ்வரன் இன்று காலை 8.30 மணியளவில் (14) பதவியேற்றுக் கொண்டார்.

இலங்கை வவுனியா பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி த.மங்களேஸ்வரன் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்ட நிலையில், வவுனியா, பூங்கா வீதியில் இருந்து மேளதாள வாத்தியத்துடன் துணைவேந்தர் கலாநிதி த.மங்களேஸ்வரன் பூங்கா வீதியில் அமைந்துள்ள பல்கலைகழகத்தின் நிர்வாகப் பிரிவுக்கு அழைத்து வரப்பட்டு பதிவாளர் முன்னிலையில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதன்பின் வவுனியா இறம்iபாக்குளம் அந்தோனியார் ஆலயம், கந்தசாமி ஆலயம், பிரதான பள்ளிவாசல், நகரப் பன்சாலை ஆகியவற்றுக்கு சென்று மதத்தலைவர்களின் ஆசிர்வாதத்தையும், பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, இதுவரை காலமும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வளாகமாக இயங்கி வந்த ‘யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம்’ எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் ‘இலங்கை வவுனியா பல்கலைக் கழகம்’ என செயற்படவுள்ளதுடன், எதிர்வரும் 11 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ வருகை தந்து உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மின்சாரம் தாக்கி 9 வயது சிறுவன் உயிரிழப்பு

east tamil

கன்னி வரவு செலவு திட்டம் இன்று

east tamil

பழைய நினைவுகள் திரும்புகிறதா?: வீட்டுக்கு சென்று மிரட்டிய ஜேவிபி உறுப்பினர்!

Pagetamil

கடிதம் கசிந்தது எவ்வாறு?: பொலிசாரை கிடுக்குப்பிடி பிடிக்கும் சட்டமா அதிபர் திணைக்களம்!

Pagetamil

சிஐடி மீது பியூமி ஹன்சமாலி வழக்கு!

Pagetamil

Leave a Comment