26.6 C
Jaffna
December 6, 2021
இலங்கை

வவுனியா பல்கலைக்கழக முதலாவது துணைவேந்தர் கலாநிதி த.மங்களேஸ்வரன்!

இலங்கை வவுனியா பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி த.மங்களேஸ்வரன் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை காலமும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வளாகமாக இயங்கி வந்த ‘யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம்’ எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் ‘இலங்கை வவுனியா பல்கலைக் கழகம்’ எனத் தரமுயரும் என கல்வி அமைச்சர் ஜி. எல். பீரிஸ் அவர்களினால் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இலங்கை வவுனியா பல்கலைக் கழகத்தைத் தாபிப்பதற்கான முன்னேற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அதன் ஒரு நிலையாக யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி த. மங்களேஸ்வரன் முதலாவது துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

இந்தியாவை சமாளிக்கவே மாகாணசபை தேர்தல் கதை: அரியநேத்திரன்!

Pagetamil

கஞ்சா நமக்கு கடவுள் தந்த வரம்; பயிரிட்டு கடன் முழுவதையும் அடைப்போம்: நாடாளுமன்றத்தில் யோசனை தெரிவித்த பெண் எம்.பி!

Pagetamil

கொவிட் சிகிச்சைக்காக மொல்னுபிராவிர் மாத்திரைகளை இலங்கை இறக்குமதி செய்யவுள்ளது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!