அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தின் பூஜை 2019-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு தடைபட்டாலும், தற்போது வெளிநாட்டில் படமாக்க வேண்டிய காட்சிகள் தவிர்த்து, இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை இன்று படக்குழு வெளியிட்டது. பைக் ரேஸ் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மோஷன் போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மோஷன் போஸ்டரைத் தொடர்ந்து ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டுள்ளது படக்குழு. 2 ஆண்டுகளாக தொடர்ச்சியாக ‘வலிமை’ அப்டேட் கேட்டு வந்த ரசிகர்களுக்கு, திடீரென்று ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளது படக்குழு.
‘வலிமை’ படத்தில் அஜித்துடன் ஹியூமா குரோஷி, கார்த்திகேயா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
@VigneshShivN @Kavithamarai @TherukuralArivu @VijaytvPugazhO @ZeeStudios_ @ZEE5Premium @ZeeTamil @zeethirai @punitgoenka @SonyMusicSouth @DoneChannel1 @mynameisraahul @gopuram_cinemas pic.twitter.com/NkYVVt5YPo
— BayViewProjectsLLP (@BayViewProjOffl) July 11, 2021