27.2 C
Jaffna
April 16, 2024
உலகம்

டாவின்சி வரைந்த 500 ஆண்டு பழமையான ஓவியம்; 90 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது!

டாவின்சி வரைந்த 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஓவியம் ஒன்று 12.2 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் மிகவும் பிரபலமான ஓவியரான லியனார்டோ டாவின்சி வரைந்த புகழ்பெற்ற ஓவியம் மோனலிசா. இந்நிலையில் லியனார்டோ 2.7 X 2.7 இன்ச் அளவுடைய குறிப்புகள் எழுதக்கூடிய காகிதத்தில் ஒரு ஓவியத்தை வரைந்தார். இது 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஓவியமாகும். இது தற்போது சுமார் 12.2 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போனது. இந்திய நாட்டு மதிப்பில் சுமார் 90 கோடி ஆகும்.

லண்டன் இருக்கும் Christie’s என்ற ஏல நிறுவனம் தான் இந்த ஓவியத்தை ஏலத்திற்கு விட்டிருக்கிறது. இதில் லியனார்டோ, கரடி ஒன்றின் தலையை வரைந்திருக்கிறார். இதனை சில்வர் பாயிண்ட் என்ற தொழிநுட்பத்தில் வரைந்திருக்கிறார். இவரின் ஓவிய ஆசிரியரான ஆண்ட்ரே, கற்றுக்கொடுத்த கலை தான் அது. இறுதியாக லியனார்டோவின் ஓவியம் 20 வருடங்களுக்கு முன்பு ஏலத்தில் விடப்பட்டிருக்கிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஈரான் ஏவுகணைகளை இடைமறிப்பதில் சவுதி பங்கேற்கவில்லை!

Pagetamil

அவுஸ்திரேலியாவில் மத வழிபாட்டிடத்தில் கத்திக்குத்து!

Pagetamil

போர் பதட்டத்தை தணிக்க வலியுறுத்தும் உலக தலைவர்கள்

Pagetamil

ரஷ்ய பாணியில் பரிசோதனை தாக்குதல் நடத்திய ஈரான்!

Pagetamil

ஈரான் மீதான இஸ்ரேலிய பதில் தாக்குதலில் அமெரிக்கா பங்கேற்காது!

Pagetamil

Leave a Comment