ஐநாவின் இந்திய தூதரான திருமூர்த்தி, உலகநாடுகள் பிற நாட்டு தீவிரவாதத்தை குறை கூறிய காலகட்டம் திரும்ப வரக்கூடாது என்று கூறியிருக்கிறார்.
ஐநா பொதுச்சபையில் நடந்த தீவிரவாதத்திற்கு எதிரான தீர்மானத்தின் போது ஐநாவின் இந்தியாவிற்கான நிரந்தரமான தூதர் திருமூர்த்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, அமெரிக்காவில் இரண்டு கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பின்பு எந்த தடையும் இல்லாமல் நாடுகள் அனைத்தும் ஒன்றாக செயல்பட்டு தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வன்முறை தேசியம், வலதுசாரி பயங்கரவாதம், வன்முறை தீவிரவாதம் போன்ற பெயர்களால் தீவிரவாதத்தைப் பிரிக்கும் நிலை இருக்கிறது. உங்கள் தீவிரவாதிகள், எங்கள் தீவிரவாதிகள் என்று அனைத்து நாடுகளும், பிற நாட்டினர் மீது குற்றம் சாட்டிய காலகட்டம் திரும்ப வரக்கூடாது என்று கூறியிருக்கிறார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1