விஜய் நடிப்பில் உருவாகும் ‘பீஸ்ட்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அனிரூத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
விஜய் 65வது படமாக அதிரடியாக உருவாகி வருகிறது ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கும் இப்படத்தின் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் முழுக்க, முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகிறது. இதோடு இந்த படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடிகர் யோகிபாபு நடித்து வருகிறார்.
முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கி 16 நாட்கள் நடைபெற்றது. இதில் ஒரு பாடல் காட்சியும், சண்டைக்காட்சிகளும் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் தொடங்கியுள்ள இந்த படப்பிடிப்பில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே நடிக்கும் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில்தான் இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார் என்பது தெரிந்து விஷயம். இருந்தப்போதிலும் பீஸ்ட் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிளை உருவாக்கும் முயற்சியில் அனிரூத் ஈடுபட்டிருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணிகள் முடியும் தருவாயில் உள்ளதால் விரைவில் ஃப்ர்ஸ்ட் சிங்கிளை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.