உலகிலேயே முதன்முறையாக ஃபிராங்கோயிஸ் இன குரங்குகள் செயற்கை கருவூட்டல் முறையில் உருவாக்கப்பட்டு, தற்போது அவை நன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன நாட்டில் ஃபிராங்கோயிஸின் லங்கூர்ஸ் எனப்படும் குரங்கு இனங்கள் அரிதான வன விலங்குகள் பட்டியலில் இருக்கிறது. இந்த வகை குரங்குகள் சோங்கிங், கியுஸூ மற்றும் வியட்நாமின் வடக்குமலை பகுதி போன்ற பகுதிகளில் அதிகமாக இருக்கிறது.
இந்நிலையில் உலக அளவில் முதன்முதலாக செயற்கை கருவூட்டல் முறையில் இந்த வகை குரங்கை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியிருக்கின்றனர். இந்த குரங்குகள் தற்போது நல்ல உடல் நலத்துடன் உள்ளது என்று ஃபிராங்கோயிஸ் குரங்கு பாதுகாப்பு ஆய்வு மையத்தின் துணை இயக்குனர் கூறியிருக்கிறார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1