பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற நடிகைக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய மர்ம நபர் மீது சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகையாகவும், மாடலிங்கிலும் ஒரே நேரத்தில் கலக்கி வருபவர் சனம் ஷெட்டி. கடந்த 2016ம் ஆண்டு ‘மிஸ் சவுத் இந்தியா’ பட்டம் பெற்ற இவர், ‘அம்புலி’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு அம்புலி, மாயை, விலாசம் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களில் நடித்து வருகிறார்.
சினிமாவில் பிசியாக நடித்து வந்த சனம் ஷெட்டி, விஜய்யின் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சனம் ஷெட்டிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒருசில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். சமூகவலைத் தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சனம் ஷெட்டி, தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவரை ஏராளமானோர் இன்ஸ்டாவில் பின் தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டிக்கு வாட்ஸ்-ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலம் மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து ஆபாசக் குறுஞ்செய்திகளை அனுப்பி வந்துள்ளார். இதனால் டென்ஷனான சனம் ஷெட்டி சென்னை அடையாறு சைபர் கிரைம் போலீசில் இன்று புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையை சேர்ந்த இளைஞன் தர்சனால் காதலித்து ஏமாற்றப்பட்டதாக முறையிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.