26.1 C
Jaffna
December 15, 2024
Pagetamil
சினிமா

எப்படி பணம் வந்தது?: நடிகைக்கு சிக்கல்!

வெளிநாட்டு பணம் தொடர்பாக பிரபல நடிகை யாமி கவுதமுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நடிகை யாமி கவுதம் தமிழில் ராதாமோகன் இயக்கிய கௌரவம் மற்றும் தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

நடிகை யாமி கவுதமுடைய தனியார் வங்கி கணக்கிற்கு ரூ.1 கோடி வெளிநாட்டு பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த பணம் எப்படி வந்தது என்பது தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு யாமி கவுதம் தரப்பில் எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் விளக்கம் அளிக்க மத்திய அமலாக்கத் துறையினர் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அந்நிய செலாவணி மோசடி வழக்கில் யாமி கவுதம் மீது இரண்டாவது முறையாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நடிகைக்கு வழங்கப்பட்ட இரண்டாவது சம்மன் இது ஜூலை 7ஆம் திகதி மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இவர் சமீபத்தில் இந்தி டைரக்டர் ஆதித்யா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘ரஹ்மான் எனக்கு தந்தையைப் போன்றவர்’ – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மோஹினி தே

Pagetamil

‘புஷ்பா 2’ வில் இடம்பெற்றுள்ள ‘கிஸ்ஸிக்’ பாடல் நவ.24 இல் வெளியீடு

Pagetamil

ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பிரிவுக்கும் மோஹினி தேவுக்கும் தொடர்பா?: வழக்கறிஞர் விளக்கம்

Pagetamil

தெலுங்கு நடிகருடன் திருமணமா?: விஜய் பட நாயகி விளக்கம்!

Pagetamil

இத்தனை வயதாகியும் அந்த விவகாரத்தில் நம்பிக்கையில்லாத நடிகை!

Pagetamil

Leave a Comment