வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தன் உடல் எடையை குறைத்துள்ள வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பற்றி நீங்கள் எல்லோரும் கேள்விபட்டிருப்பீர்கள். அவர் அந்நாட்டின் சர்வாதிகாரியாக இருந்து வருகிறார். அவர் அவரது குடும்பம் என வரிசையாக பலர் அந்நாட்டை ஆண்டு வருகின்றனர். அந்நாட்டில் உள்ள மக்கள் மற்ற உலக மக்களுடன் தொடர்பில் இல்லாமலேயே இருந்து வருகின்றனர். இதனால் அந்நாட்டிற்குள் என்ன நடக்கிறது. என்பதே பரம ரகசியமாக இருக்கிறது.அந்நாட்டில் நடப்பதை வெளிநாடுகளுக்கு தெரிவிப்பது நாட்டில் மரணதண்டனை வழங்கும் அளவிற்கு குற்றமாகும். அதனால் அந்நாட்டில் உள்ள பல விஷயங்கள் மிகவும் ரகசியமானவை. அந்நாட்டு மக்கள் பலர் தங்கள் அதிபர் நலன் மற்றும் அவரது குடும்ப நலனுக்காக பிரார்த்தனை செய்வார்கள்.
37 வயதான கிம் ஜாங் உன் பார்ப்பதற்கு சற்று உடல் பருமன் கொண்டவராக தென்படுவார். இதற்கிடையில் கொரோனா பரவல் ஏற்பட்ட பின்பு பல மாதங்களாக கிம் ஜாங் உன் பொதுவெளியில் தோன்றாமலேயேக இருந்தார். அந்நாட்டிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களில் கிம் ஜாங் உன்னை காண முடியவில்லை இதனால் சிலர் அவர் இறந்துவிட்டார் என்றும், சிலர் இவர் மரணபடுக்கையில் இருக்கிறார் என்றும் வதந்திகளை பரப்பினர். அதன் பின் ஒருநாள் வீடியோவில் தோன்றி தான் நன்றாக இருப்பதை உறுதிபடுத்தினார்.
அதன் பின்னர் அவர் அவ்வளவு வீடியோக்களில் தோன்ற வில்லை அவர் குறித்த புகைப்படங்களும் வெளியாகவில்லை. இந்நிலையில் சமீபத்தில் தனது அரசு அதிகாரிகளுடன் உரையாடும் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது அதில் அவர் உடல் மெலிவான நிலையில் காணப்பட்டார்.ராய்டர்ஸ் நிறுவனம் அவர் உடல் பருமன் அதிகமாக இருந்த போது எடுத்த வீடியோவையும் தற்போது எடுத்த வீடியோவையும் இணைத்து அவர் உடல் பருமன் குறைத்ததை கண்டுபிடித்து வீடியோவாக வெளியிட்டுள்ளது. அதில் அவர் உடல் எடை குறைந்திருப்பதை தெளிவாக காணமுடிகிறது.ஆனால் இவர் எப்படி எடையை குறைத்தார் என யாருக்கும் தெரியாது.
Before-and-after videos show that North Korean leader Kim Jong Un noticeably lost weight. On Sunday, the country's state media offered a rare public segment on it, although the reason for the weight loss is unclear https://t.co/RhQEqL7dXH pic.twitter.com/H9szU1rA1W
— Reuters (@Reuters) June 27, 2021
இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மக்கள் பலர் இவர் எப்படி எடையை குறைத்தார் என ஆச்சரிப்பட்டு வருகின்றனர். பலர் எப்படி இருந்த கிம் ஜாங் உன் இப்படி ஆகிட்டார் என இதை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இவர் எப்படி எடையை குறைத்திருப்பார் என நீங்கள் நினைக்கிறீர்கள் கமெண்டில் சொல்லுங்கள்.