ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இன்று மாலை இலங்கையை வந்தடைந்தது.
இலங்கை-இந்திய அணிகளிற்கிடையில் ஒருநாள், ரி20 போட்டி தொடர் ஜூலை 13ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.
வழக்கமான இந்திய கப்டன் விராட் கோலி மற்றும் துணை கப்டன் ரோஹித் சர்மா இல்லாத நிலையில் தவான் தனது வாழ்க்கையில் முதல் முறையாக தேசிய அணியை வழிநடத்துகிறார்.
வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இந்த சுற்றுப்பயணத்தில் துணைக் கப்டனாக செயற்படுவார்.
முன்னாள் இந்திய கப்டன் மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமி இயக்குனர் ராகுல் டிராவிட் 20 பேர் கொண்ட அணியின் பயிற்சியாளராக உள்ளார்.
இலங்கைக்கு புறப்படுவதற்கு முன் இந்திய அணி மும்பையில் இரண்டு வார தனிமைப்படுத்தலில் இருந்தனர்.
ஒருநாள் தொடர் ஜூலை 13 ஆம் திகதி தொடங்கி ஜூலை 18 ஆம் திகதியுடன் முடிவடையும்.
மூன்று ரி20 போட்டிகளை கொண்ட தொடர் ஜூலை 21, 23, மற்றும் 25 ஆகிய திகதிகளில் நடைபெறும். அனைத்து போட்டிகளும் கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெறும்.