டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் ஸ்கூல் ஆஃப் என்விராயின் மெண்டல் சயின்ஸ் துறையில் கம்யூட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றி வருவர் வினோத்குமார் சவுதிரி, இவர் அந்த குறிப்பிட்ட துறையில் உள்ள தகவல்களை கம்யூட்டரில் தட்டச்சு செய்து ஏற்றுவது தான் இவரது வேலை. இவரது வேலை பார்க்க எளிமையான தாகத்தான் இருக்கும். ஆனால்அவர் அந்த பணியிலேயே இதுவரை 9கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார். அவரது கின்னஸ் சாதனைகள் எல்லாம் வித்தியாசமானது.
கடந்த 2014ம் ஆண்டு இவர் முதன் முறையாக தன் மூக்கால் 44.30 நொடிகளில் 103 எழுத்துக்களை தட்டச்சு செய்துள்ளார். இது மிகப்பெரிய சாதனை பலருக்கு கை விரல்களாலேயே இவ்வளவு வேகமாக தட்டச்சு செய்ய முடியாது. ஆனால் இவர் மூக்கால் தட்டச்சு செய்து கின்னஸ் சாதனை படைத்தார். அதன்பின் அவர் கண்களை மூடிக்கொண்டு தட்டச்சு செய்வது, வாயில் மரக்கட்டையை வைத்துக்கொண்டுவேகமாக தட்டச்சு செய்வது, என பல விதமான கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார்.
சமீபத்தில் இவர் கையில் டென்னீஸ் பந்தை வைத்துக்கொண்டே தட்டச்சு செய்தது சாதனை படைத்தார். இதில் இவர் ஒரு நிமிடத்தில் 205 முறை டென்னிஸ் பந்தை தொட்டு தட்டச்சு செய்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒரு சாதாரண பணியாளர் தன் பணியில் உள்ள ஆர்வத்தில் அதில் 9 உலக சாதனைகளை படைத்துள்ளதை பலர் பாராட்டினர். வினோத்குமார் இது மட்டுமில்லாமல் அவர் வீட்டில் தனியாக மாற்று திறனாளிகளுக்கான தட்டச்சு பயிற்சியை வழங்கி வருகிறார். பலரை இவரது இந்த முயற்சியும் ஈர்த்துள்ளது
சமூகவலைத்தளங்களில் வினோத்குமாருக்கு பாராட்டுக்கள் குவிந்து விருகிறது