குற்றம்

16 வயது மாணவியை கடத்தி சென்ற 24 வயது தனியார் கல்வி நிலைய ஆசிரியர் மடக்கிப்பிடிக்கப்பட்டு நையப்புடைப்பு!

அத்தியாவசியமான பேஸ்புக் படப்பிடிப்பிற்கு என அழைத்து சென்ற 16 வயதான மாணவியை கடத்திய, 24 வயதான தனியார் வகுப்பு ஆசிரியரை கிராம மக்கள் வளைத்துப் பிடித்து அடித்து நொருக்கியுள்ளனர்.

ஆசிரியர் இப்பொழுது கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார். அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்ட பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளார்.

கைது செய்யப்பட்ட தனியார் கல்வி ஆசிரியர் 24 வயது இளைஞர். மாணவிக்கு 16 வயது, மாணவியின் வீட்டிற்குச் சென்று மேலதிக கற்பித்தலில் ஈடுபட்ட போது, காதல் மலர்ந்தது. இருவரும் திருமணத்திற்கு முந்தைய உறவை வைத்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆசிரியரின் வயது மிகவும் அதிகமாக இருப்பதால் சிறுமியின் பெற்றோர் உறவை விரும்பவில்லை.

பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில், ஆசிரியர் இரண்டு அல்லது மூன்று வாரங்களாக மாணவியை கடத்த திட்டமிட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர் யக்கலமுல்லவில் ஒரு அழகு நிபுணரின் உதவியைப் பெற்றுள்ளார். மாணவியையும் மற்ற இரண்டு நண்பிகளையும் முகநூல் படப்பிடிப்புக்கு அழைத்து வருமாறு கேட்டுக் கொண்டார். மாணவிகளை அழைத்துச் வர, ஆசிரியரே கார் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

சித்தலடோல பகுதியில் படப்பிடிப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மூன்று மாணவிகளும் காரில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டனர். அழகு நிபுணர் காரின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்திருந்தார். ஆசிரியர் முச்சக்கர வண்டியில் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை காரில் கடத்திச் சென்றுள்ளார். இன்னொருவர் அவருக்கு உதவியாக வந்துள்ளார்.

ஆசிரியர் சிறுமியைக் கடத்திச் செல்வதை அறிந்த சிலர், அவரை விரட்டி சென்று அகுலஹென பகுதியில் மடக்கிப் பிடித்தனர்.

ஆசிரியரை நையப்புடைத்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அழகு நிபுணர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஆசிரியர் தற்போது காலி  கராபிட்டி போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
1
+1
0

Related posts

யாழில் கடல் ஆய்விற்கு வந்த அமெரிக்கரின் உடமைகள் திருட்டு!

Pagetamil

கிளிநொச்சியில் அன்ரியின் வீட்டில் ஒளிந்திருந்தவருக்கு விளக்கமறியல்!

Pagetamil

பேருந்திலிருந்து முதியவரின் பணத்தை திருடிக் கொண்டு ஓடிய இளைஞன் மடக்கிப் பிடிப்பு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!