Site icon Pagetamil

ஜூவல்லரி பிசினஸில் களமிறங்கும் சமந்தா!

நடிகை சமந்தா ஜூவல்லரி பிசினஸில் களமிறங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் சமந்தா தற்போது சவாலான கதாபாத்திரங்களையே ஏற்று நடித்து வருகிறார்.சமந்தா கடைசியாக ‘தி பேமிலி மேன்’ சீரிஸ் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார். சமந்தாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டைப் பெற்றது. சமந்தா பாலிவுட்டில் இந்த வெப் சீரிஸ் மூலம் தான் என்ட்ரி கொடுத்தார். முதல் அறிமுகத்திலே பல ரசிகர்களை வென்றுள்ளார் சமந்தா.

அவர் தற்போது சகுந்தலம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் மேலும் பல பட வாய்ப்புகளும் அவருக்கு குவிந்து வருகிறது.இதற்கிடையில் சமந்தா தற்போது புதிய தொழில் ஒன்றை துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.

சமந்தா சாக்கி என்ற பேஷன் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அது பெண்களுக்கான பேஷன் நிறுவனமாகும், சமந்தாவின் இந்த நிறுவனத்திற்கு பெண்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறதாம். சமந்தா தற்போது மேலும் தனது தொழிலை விரிவுபடுத்த விரும்புகிறார். அதற்காக கடந்த இரண்டு மாதங்களாக முழு திட்டத்தில் ஈடுபட்டுள்ளராம்.

சமந்தா பேஷன் நகை தொழிலில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் முடிந்துவிட்டதாம். விரைவில் தனது பேஷன் நகை நிறுவனம் குறித்த அறிவிப்போடு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version