விஜய் பாலிவுட் நடிகர் டைகர் ஷராஃப்பை தலைவா என்று அழைத்ததாக மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.
நேற்று நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். நடிகை மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தின் ஜேடி கெட்டப்பில் வந்து விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார். அதையடுத்து ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடிய மாளவிகா விஜய் குறித்து பேசியுள்ளார். விஜய் பற்றி ஒரு சுவாரஸ்யமான உண்மையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
விஜய் பாலிவுட் நடிகர் டைகர் ஷிராப்பின் மிகப்பெரிய ரசிகர் என்பதை வெளிப்படுத்தினார். தான் விஜயுடன் சேர்ந்து டைகர் ஷராஃப் நடித்த பாகி 3 படத்தைப் பார்த்ததாகத் தெரிவித்துள்ளார். அப்போது டைகர் ஷராஃப் என்ட்ரி சீனில் “தலைவா” என்று விஜய் கத்தியதாகவும் தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் தமிழ்நாட்டிற்குப் பிறகு விஜய்க்கு அதிகம் பிடித்த இடம் நியூயார்க் என்றும் தெரிவித்துள்ளார்.
விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு பூஜா ஹெக்டே இசையமைக்கிறார்.