சினிமா

விஜய்யின் பிறந்தநாளை நடுகடலில் கொண்டாடிய ரசிகர்கள் !

நடிகர் விஜய்யின் பிறந்தநாள் உலகம் முழுவதும் கோலாகலமாக நேற்று  கொண்டாடப்பட்டது. இதற்காக ஒரு வாரத்திற்கு முன்பே காமன் டிபியை வைத்து சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் செய்து வந்தனர். ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் விஜய்யின் 65வது படமான ‘பீஸ்ட்’ படத்தின் போஸ்டர்களும் வெளியிடப்பட்டது. மாஸ் லுக்கில் இருந்த விஜய்யின் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

இதையடுத்து விஜய்யின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் ரசிகர்கள் பல்வேறு வகையில் கொண்டாடினர். கொரானா காலம் என்பதால் ஏழை மக்களுக்கு உணவு மற்றும் பொருட்கள் வழங்குதல், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பல நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டது. இதேபோன்று பெரும்பாலான இடங்களில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளை புதுச்சேரி ரசிகர்கள் வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளனர். புதுச்சேரி மாநிலம் விஜய் மன்றத்தை சேர்ந்த அரியாங்குப்பத்தை பகுதி தலைவர் வசந்தராஜா தலைமையில் ரசிகர்கள் சிலர் நடு கடலுக்கு சென்று பிறந்தநாள் பேனர் வைத்துள்ளனர். அதோடு பேனருக்கு பால் அபிஷேகம் செய்தனர். தற்போது விஜய் ரசிகர்கள் பேனர் வைத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சல்மான் கான்- பூஜா ஹெக்டே காதல்?

Pagetamil

‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்காக ஒஸ்கார் பரப்புரை செலவு என்ன?: ராஜமவுலி மகன் விளக்கம்

Pagetamil

நடிகை யாஷிகா ஆனந்த் மீது பிறப்பித்த பிடிவாரன்ட் தளர்வு: ஏப்ரல் 25 இல் மீண்டும் ஆஜராக உத்தரவு

Pagetamil

கணவரை ஆள் வைத்து அடித்த சின்னத்திரை நடிகை கைது!

Pagetamil

10 பெண்களுடன் தொடர்பில் இருந்த பிரபல வில்லன், மனைவியை விவாகரத்து செய்தார்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!