உலகம்

யோகா நேபாளத்தில் தான் உருவானது – பிரதமர் சர்மா ஒலி சர்ச்சை பேச்சு

ஏழாவது சர்வதேச யோகா தினம் நேற்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டது.அகில உலகத்துக்கு இந்தியா வழங்கிய பெருங்கொடைகளில் முக்கியமானது யோகா. மனித குலத்தின் நலம் பேணும் அற்புதமான இந்தக் கலைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 21 சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி 7-வது சர்வதேச யோகா தினம் நேற்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மக்கள் வீடுகளில் தனியாகவும், பொது இடங்களில் குழுவாகவும் பல்வேறு ஆசனங்கள் மற்றும் பிராணாயாம மூச்சுப் பயிற்சிகளில் ஈடுபட்டனர். மலை உச்சிகள் முதல் கடற்கரை வரை, நகர சதுக்கங்கள் முதல் பூங்காக்கள் வரை என உலகம் முழுவதும் நேற்று சிறப்பான யோகா கொண்டாட்டங்கள் நடந்தன.

இந்நிலையில், காத்மாண்டுவில் நேற்று நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் நேபாள நாட்டு பிரதமர் கே.பி. சர்மா ஒலி பேசியதாவது:

யோகா இந்தியாவில் தோன்றியது அல்ல. யோகா கண்டுபிடிக்கப்பட்டபோது இந்தியா ஒரு நாடாகவே இல்லை. பல ராஜ்ஜியங்களாக இருந்தது. நேபாளத்தில் தான் யோகா தோன்றியது. அதை சர்வதேச அரங்கில் முன்னிறுத்த நாம் தவறிவிட்டோம். ஆனால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதற்கு உரிமை கோரி, சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்று விட்டார்.

நம் நாட்டைச் சேர்ந்த முனிவர்கள், யோகிகள் குறித்தும் உலகுக்கு தெரிவிக்கத் தவறிவிட்டோம். நேபாளத்தில் உள்ள அயோத்தியாபுரியில் தான், ராமர் பிறந்தார். சீதாவும் நேபாளத்தின் தேவ்கட் பகுதியில் பிறந்தவர். முனிவர் வால்மீகியும் இங்கு தான் பிறந்தார். ஆனால் இந்த வரலாறு திருத்தப்பட்டுவிட்டது. அதை சரி செய்ய வேண்டிய நேரம் நமக்கு வந்துவிட்டது எனதெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

25,000 ஒளி ஆண்டுகளிற்கு அப்பால் புதிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு!

Pagetamil

ஒரு வருடத்திற்கு பிறகு தடையைத் தளர்த்திய சவூதி அரசு; தடுப்பூசி போட்டால் சர்வதேச பயணங்களுக்கு அனுமதி!

divya divya

நாய்களிடையே பரவும் கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு தாவியது; ஆபத்து இல்லை என ஆய்வாளர்கள் தகவல்!

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!