உலகம்

அமெரிக்காவில் 37 மில்லியனுக்கும் அதிகமானோர் யோகா செய்கின்றனர் – வெளியுறவுத்துறை!

சர்வதேச யோகா தினம் நேற்று உலகெங்கும் கொண்டாடப்பட்டது. பல நாடுகளில் பல்லாயிரக்கணக்கானோர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் யோகா நிகழ்ச்சி நடந்தது. நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் சுமார் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டு யோகாவில் ஈடுபட்டனர்.

அமெரிக்கவாழ் இந்தியர்கள், அமெரிக்கர்கள் உள்ளிட்ட பல தரப்பட்ட மக்கள் ஆர்வத்துடன் அங்கு யோகா செய்தனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் 37 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் யோகா செய்கின்றனர் என அந்நாட்டு வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அந்நாட்டு வெளியுறவுத்துறை தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், யோகா என்பது சமஸ்கிருதத்திலிருந்து உருவானது ஆகும். இதன் விளக்கம் சேர்தல் அல்லது ஒன்றிணைத்தல் என்பதாகும்.

இந்தியாவில் இருந்து வந்த இந்த பழங்கால ஒழுக்கத்தை அமெரிக்காவில் யோகா பயிற்சி செய்யும் 37 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்பற்றுகின்றனர். உலகெங்கிலும் உள்ள மக்களை இந்த யோகா இணைக்கிறது என பதிவிட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றினையும் 57 இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு!

divya divya

உலகளவில் குறையாத கொரோனாவின் தாக்கம்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 கோடியை கடந்தது!

divya divya

ஒரே விமானத்தில் 47 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி!!!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!