இந்தியாவிலிருந்து கஞ்சா போதைப்பொருள் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 174 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள், 5 கிலோ மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தியாவிலிருந்து கஞ்சா போதைப்பொருள், மஞ்சள் கடத்திக் கொண்டு பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் நுழைந்த இருவரே கைதாகினர்.
பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடற்படையினரால் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா போதைப்பொருளும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1