இலங்கை

மணல் டிப்பர் மீது இராணுவம் துப்பாக்கி பிரயோகம்!

கிளிநொச்சி மாவட்டம் புளியம்பொக்கணை நாகேந்திரபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனம் மீது படைத்தரப்பினர் மேற்கொண்டனர். இதன்போது, கண்ணாடி சிதறல்களால் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

நாகேந்திரபுரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடி ஊடாக மணல் ஏற்றியபடி சென்ற வாகனத்தினை படையினர் நிறுத்துமாறு தெரிவித்ததாகவும், இருந்தபோதிலும் அதனையும் மீறி வாகனம் பயணித்தமையால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் போது சாரதியின் உதவியாளர் கண்ணாடி துகள்களால் காயம் அடைந்த நிலையில் தருமபுரம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாம் மணல் ஏற்றுவதற்கான அனுமதியுடனேயே பயணித்ததாகவும், இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் சாரதி தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

உலக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்!

Pagetamil

ஒரு நாள் நீக்கம்: மன்னார் நிலவரம்!

Pagetamil

சாவகச்சேரியில் சொகுசு பேருந்து மோதி இளைஞன் பலி!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!