பிக் பாஸ் புகழ் அர்ச்சனாவின் மாமியார் மற்றும் மாமனார் இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு 45 நாட்களாக மருத்துவமனையில் இருந்திருக்கின்றனர். அது பற்றி தற்போது youtube சேனலில் வீடியோ வெளியிட்டு உள்ளார் அர்ச்சனா.
பிக் பாஸ் நான்காம் சீசனில் முக்கிய பொடியாளாராக இருந்தவர் அர்ச்சனா. அன்பு தான் அவரது strategy என சொல்லி அவர் போட்டியில் செய்த விஷயங்கள் அதிகம் விமர்சனங்களையும் சந்தித்தது. இறுதிவரை அர்ச்சனா வருவார் என எதிர்பார்க்கப்பட்டாலும் அவர் 77வது நாளில் எலிமினேட் ஆனார்.
அதற்கு பிறகு அர்ச்சனா விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார். மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை உள்ளிட்ட ஷோக்களை அர்ச்சனா தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் அர்ச்சனாவின் குடும்பத்தில் இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 45 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சையில் இருந்தார்களாம்.மாமனார் மற்றும் மாமியார் இருவரும் கொரோனாவில் இருந்து மீண்டது பற்றி அவர் ஒரு வீடியோ.வெளியிட்டு இருக்கிறார். அதில் அர்ச்சனா என்ன கூறியுள்ளார் என நீங்களே பாருங்கள்.