ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுடன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவின் இல்லத்தை இன்று பொலிசார் சோதனையிட்டனர்.
வத்தளையிலுள்ள அவரது இல்லத்திற்கு பொலிசார் வந்ததாகவும், அங்கு கூட்டம் ஏதும் நடைபெறுகிறதா என பொலிசார் விசாரித்ததாகவும் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அவரது வீட்டை சுற்றியுள்ள வீதிகளிலும் பொலிசாரின் பிரசன்னம் இருந்தது.
பொதுமக்களை ஏற்றிய பேருந்து ஒன்று அவரது வீட்டுக்கு சென்றது பற்றிய தகவல் தமக்கு கிடைத்ததாக பொலிசார் தெரிவித்தனர். அவரது இல்லத்தை ஆய்வு செய்த பின்னர் அங்கிருந்து வெளியேறினர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1