90 ஆயிரம் ரூபா பெறுமதியான 30 சினோபார்ம் தடுப்பூசிகளை திருடியமை தொடர்பில் ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரி நேற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதனடிப்படையில் சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்தில் கடமையாற்றும் ஒருவர் மற்றும் வாகன ஓட்டுநர் ஒருவர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன் சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பதற்காக காலி குற்றத்தடுப்பு பிரிவின் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1