30.9 C
Jaffna
April 29, 2025
Pagetamil
சினிமா

‘தளபதி 65’ பட புதிய அப்டேட்!

விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக இதன் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்து தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருவதால் ஜூலை மாதம் முதல் ஷூட்டிங்கைத் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்திற்காக சத்தமே இல்லாமல் வடபழனி குமரன் காலனியில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் ஒரு செட் அமைக்கும் வேலைகள் நடந்து முடிந்துள்ளன. இங்கு சின்ன குழுவுடன் இரண்டு வாரங்கள் வரை ஷூட்டிங்கைத் தொடர முடிவெடுத்துள்ளர்கள்.

இந்த செட்டில் பாடல் காட்சியை படமாக்க இருக்கிறார்கள். இதில் பூஜா ஹெக்டேவுடன் நடனமாட இருக்கிறார் விஜய். படப்பிடிப்பை இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ம் திகதி தமிழ் வருடப்பிறப்புக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டிருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்

மேடையிலேயே மேரேஜ் ப்ரோபோஸ் செய்த இயக்குநர்! – ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ நிகழ்வில் நெகிழ்ச்சி

Pagetamil

சீமான், ஆர்.கே.சுரேஷ் இணையும் படத் தலைப்பு ‘தர்மயுத்தம்’

Pagetamil

காப்புரிமை வழக்கில் ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த நீதிமன்றம் உத்தரவு: பின்னணி என்ன?

Pagetamil

ஈழத் தமிழ் பின்புலத்தில் காமெடி ஏன்? – சசிகுமார் பகிரும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’அனுபவம்

Pagetamil

பாதுகாப்பற்ற நீர்க்குழியிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு!

Pagetamil

Leave a Comment