25.7 C
Jaffna
December 11, 2024
Pagetamil
உலகம்

கொலம்பியா இராணுவ தளத்தில் கார் குண்டு தாக்குதல் !

கொலம்பியாவின் ககூட்டா நகரில் இராணுவ தளம் அமைந்துள்ளது. வெனிசுலா எல்லையை ஒட்டி உள்ள இந்த தளத்தை குறிவைத்து கார் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 36 வீரர்கள் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலை இடதுசாரி கிளர்ச்சிக் குழுவினர் நடத்தியிருக்கலாம் என குற்றம்சாட்டப்படுகிறது.

கொலம்பியாவின் புரட்சிகர ஆயுதப்படையின் கிளர்ச்சியாளர்களுடன் 2016 ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், தேசிய விடுதலை இராணுவத்தின் கொரில்லா படையினர், வன்முறைக் கும்பல்கள் மற்றும் ஒப்பந்தத்தை நிராகரித்துள்ள புரட்சிகர ஆயுதப்படையினர் இராணுவத்துடன் தொடர்ந்து மோதலில் ஈடுபடுகின்றனர்.

பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளை சந்தித்து விசாரிப்பதற்காக ககூட்டா செல்ல உள்ளதாக அதிபர் இவான் டியூக் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தென்கொரியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் தற்கொலை முயற்சி

Pagetamil

எல் சால்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

east pagetamil

சிரியா ஜனாதிபதி மொஸ்க்கோவில் தஞ்சம்

east pagetamil

14 வயது சிறுவனால் வரையப்பட்ட ஓவியம் – கவிழ்க்கப்பட்டது சிரியா ஆட்சி

east pagetamil

சிரியா முன்னாள் ஜனாதிபதி அசாத் பற்றிய மர்மம் விலகியது: ரஷ்யா புகலிடம் அளித்துள்ளது!

Pagetamil

Leave a Comment