தமிழ் சினிமாவின் சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் செந்தில். இவர் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் செந்தில் அரசியலிலும் தீவிரமாக உள்ளார்.
இந்நிலையில் நடிகர் செந்தில், தனது பெயரில் டுவிட்டரில் உலா வரும் போலி கணக்கு குறித்து கமிஷனர் அலுவலகத்தில் வக்கீலுடன் வந்து புகார் அளித்துள்ளார்.
இதனால் தனது நிம்மதியே போய்விட்டதாக கூறியுள்ளார். மேலும் தன்னுடைய பெயரில் போலி கணக்கு தொடங்கிய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது பெயரில் உள்ள போலி டுவிட்டர் கணக்கை முடக்க வேண்டும் என்றும் செந்தில் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
தனக்கு கணக்கே வராது… இதில் எங்கிருந்து டுவிட்டர் கணக்கு என்றும் செய்தியாளர்களிடம் கூறி இருக்கிறார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1