வவுனியா நகரசபைத்தலைவர் இ.கௌதமன் பொலிசாரால் இன்று கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் வவுனியா நகரில் அமைந்துள்ள வாடிவீடு வளாகத்திற்கு விஜயம் செய்த நகரசபைத்தலைவர் அதற்கு சீல் வைத்திருந்தார்.
இதன்போது அங்கு கடமையில் இருந்த பாதுகாப்பு ஊழியருடன் தலைவர் முரண்பட்டதாக தெரிவித்து வவுனியா பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டது.
இதனையடுத்து இன்று நகரசபை தலைவர் பொலிஸ்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டார். பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
What’s your Reaction?
+1
+1
1
+1
1
+1
+1
+1
+1