சினிமா

சேதுபதி படங்களைத் தயாரிக்கும் தாணு!

‘கர்ணன்’ படத்தை அடுத்து விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் அடுத்தடுத்த படங்களை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவின் மிகவும் பிஸியான நடிகராக வளர்த்துள்ளார். இன்னும் பல வருடங்கள் நடிக்கும் அளவிற்கு பல படங்களில் கமிட் ஆகியுள்ளார். தேதிகள் இல்லாததால் பல படங்களை நிராகரிக்கவும் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல தயரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணு கடைசியாக மாரி செல்வராஜ் மற்றும் தனுஷ் கூட்டணியில் வெளியான ‘கர்ணன்’ படத்தைத் தயாரித்தார்.

தற்போது செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் படத்தையும் தயாரிக்கிறார். இந்நிலையில் தாணு விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் அடுத்தடுத்த இரண்டு படங்களைத் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அந்த இரண்டு படங்களில் ஒன்றை இயக்குனர் சீனு ராமசாமி இயக்க உள்ளாராம். இது விஜய் சேதுபதி- சீனு ராமசாமி கூட்டணி இணையும் ஐந்தாவது படமாகும். இரண்டாவது படத்தின் இயக்குனர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு கொரோனா!

Pagetamil

ஜூன் 1ம் தேதி வெளியாகும் ஜகமே தந்திரம் ட்ரெய்லர்; ட்ரெய்லரை பார்க்க ரசிகர்கள் ஆவல்!

divya divya

ருத்ரதாண்டவ வில்லன் கௌதம் மேனன்

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!