விஜய்யுடன் சேர்ந்து யூத் படத்தில் நடித்த ஷாஹீன் கானின் கணவர் மற்றும் மகளின் புகைப்படங்கள் முதல் முறையாக வைரலாகியுள்ளது. ஷாஹீனை மீண்டும் நடிக்க வருமாறு அழைக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.
விஜய்யின் யூத் படத்தில் ஹீரோயினாக நடித்த ஷாஹீன் கானின் குடும்ப புகைப்படம் வைரலாகியுள்ளது. திருமணத்திற்கு பிறகு ஷாஹீன் படங்களில் நடிக்கவில்லை.சிரு நவ்வுடோ தெலுங்கு படம் மூலம் நடிகையானவர் மும்பையை சேர்ந்த ஷாஹீன் கான். அந்த படத்தில் சந்தியா என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார். சிரு நவ்வுடோ படத்தின் கன்னட ரீமேக்கிலும் ஷாஹீன் தான் ஹீரோயின். மேலும் அந்த படத்தின் தமிழ் ரீமேக்கான யூத் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை கவர்ந்தார் ஷாஹீன். ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஷாஹீனை தேடிக் கண்டுபிடித்த விஜய் ரசிகர்கள், அவரை மீண்டும் படங்களில் நடிக்க வருமாறு அழைக்கிறார்கள். நாங்கள் சின்னப் பிள்ளையாக இருக்கும்போது யூத் படம் பார்த்தோம், நாங்கள் வளர்ந்த பிறகும் நீங்கள் இன்னும் அப்படியே அழகாக இருக்கிறீர்கள். உங்களை பார்த்தால் ஒரு குழந்தைக்கு தாய் என்று சொல்ல முடியாது. தயவு செய்து மீண்டும் நடிக்க வாங்க மேடம் என்று ரசிகர்கள் அன்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தாலும் மீண்டும் கேமராவுக்கு முன்பு வரும் ஐடியாவில் ஷாஹீன் இருப்பதாக தெரியவில்லை. சினிமாவை விட்டு விலகினாலும் தான் நடித்த படங்களை அவர் இன்னும் மறக்கவில்லை. அண்மையில் கூட யூத் பட பாடல் வீடியோவை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருக்கிறார். தான் நடித்த படங்களின் போஸ்டர்களை வெளியிட்டு பழைய நினைவுகளை அசைபோடுகிறார் ஷாஹீன்.