25.4 C
Jaffna
January 19, 2022
சினிமா

பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகைக்கு ரூ.8 கோடி சம்பளம்!

‘பாகுபலி’ படங்களுக்குப் பிறகு இந்திய அளவில் பிரபலமான நடிகராகிவிட்டார் பிரபாஸ். இதனால் அவர் நடித்து வரும் படங்களை பான்-இந்தியா படமாகவே உருவாக்கி வருகின்றனர். இதன் காரணமாக இந்திய அளவில் பிரபலமான நடிகைகளை அவருக்கு ஜோடியாக நடிக்க வைக்கின்றனர். குறிப்பாக பாலிவுட் நடிகைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அந்த வகையில், சாஹோ படத்தில் ஷ்ரத்தா கபூருடன் ஜோடி சேர்ந்த பிரபாஸ், ஆதிபுருஷ் படத்தில் கீர்த்தி சனோனுடன் நடித்து வருகிறார்.

தீபிகா படுகோனே

இது தவிர மகாநடி இயக்குனருடன் பிரபாஸ் இணையும் படத்தில் முன்னணி பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அவர் நடிக்கும் முதல் தெலுங்கு படம் இதுவாகும். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில், பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க, நடிகை தீபிகா படுகோனேவுக்கு ரூ.8 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இதையறிந்த தென்னிந்திய நடிகைகள் வாயடைத்துப்போய் உள்ளார்களாம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

அய்யோ அது நான் இல்லை,பதறியடித்து விளக்கம் கொடுத்த லொள்ளு சபா மாறன்! – பெயர் குழப்பம்

divya divya

சினிமாவில் மட்டுமா குடும்ப குத்து விளக்கு?

Pagetamil

சினிமா பத்திரிகையாளர்களுக்கு சத்தமில்லாமல் உதவியுள்ள விஜய் சேதுபதி!

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!