உலகம்

நைஜீரியாவில் கிராமங்களுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் !

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். இதுதவிர போகோ ஹராம் பயங்கரவாதிகளால் நாட்டில் நிலவும் அசாதாரண சூழலை பயன்படுத்தி பல்வேறு ஆயுத குழுக்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளன. குறிப்பாக நாட்டின் வடமேற்கு பகுதியில் பல ஆயுத குழுக்கள் கொலை, கொள்ளை மற்றும் கடத்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தநிலையில் வடமேற்கு மாகாணம் ஷாம்பாராவின் சுர்மி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்துக்குள் நேற்று முன்தினம் இரவு நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் புகுந்தனர். பயங்கர ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்திறங்கிய பயங்கரவாதிகள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவதுபோல் சுட்டுத் தள்ளினர். பின்னர் அந்த கிராமத்தில் இருந்த கால்நடை பண்ணை மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்த கால்நடைகளை கடத்தி சென்றனர்.

அதுமட்டுமின்றி செல்லும் வழியில் இதேபோல் 5 கிராமங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகளின் இந்தக் கொடூரத் தாக்குதல்களில் 53 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் 100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கோடீஸ்வரர் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் எலான் மஸ்க்

Pagetamil

உக்ரைனின் கடைசிப் போர்க்கப்பலையும் அழித்தது ரஷ்யா

Pagetamil

சூடான் போர் நிறுத்தத்திலிருந்து இராணுவம் விலகுகிறது!

Pagetamil

வடக்கு கொசோவாவுக்கு கூடுதல் துருப்புக்களை அனுப்புகிறது நேட்டோ

Pagetamil

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் மீது உக்ரைனின் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் முயற்சி தோல்வி!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!