லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மற்றும் ஒரு மினி கோடம்பாக்கமே நடித்த மாஸ்டர் திரைப்படம் பொங்கல் அன்று வெளியானது. 50 சதவீத Occupancy-இல் கூட வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த திரைப்படம் இரண்டு வாரங்களில் 200 கோடியை வசூல் செய்தது என்று கூறப்படுகிறது. இந்த படம் வெளியான வெறும் 16 நாட்களிலேயே மாஸ்டர் திரைப்படம் ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியானது. அதில் கூட மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
இந்தநிலையில், ஒவ்வொரு வருடமும் சிறந்த படங்கள், பிரபலமான படங்கள் உள்ளிட்ட பல பட்டியல்களை ஐஎம்டிபி இணையதளம் வெளியிடும். அந்த வகையில் தற்போது 2021ஆம் ஆண்டு, இதுவரை வெளியான இந்தியப் படங்களில் பிரபலமான படங்கள் என்ன என்பதை வெளியிட்டுள்ளது.
இதில் மாஸ்டர் படம் முதலிடம் பிடித்துள்ளது அதனை தொடர்ந்து த்ரிஷ்யம் 2, கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களை 4 மற்றும் 6 – ஆவது இடங்களை பிடித்துள்ளது. மாஸ்டர் 2. ஆஸ்பிரன்ட்ஸ் 3. தி வைட் டைகர் 4. த்ரிஷ்யம் 2 5. நவம்பர் ஸ்டோரி 6. கர்ணன் 7. வக்கீல் ஸாப் 8. மஹாராணி 9. க்ராக் 10. தி கிரேட் இண்டியன் கிச்சன் இதில் திரைப்படங்களோடு வெப்சீரிஸ்களும் இடம் பிடித்துள்ளது.