தேனீகள் பெரும்பாலும் தேனை சேகரித்தால் அந்த தேன் பிரெளன் நிறத்தில் தான் இருக்கும். ஆனால் சில இடங்களில் தேனீகள் நில நிற தேன்களை சேகரித்துள்ளன. இது பற்றி விவரிவாகவும், எப்படி அந்த தேன்கள் உருவானது என்று தெளிவாகவும் காணலாம் வாருங்கள்.
தேன் உடலுக்கு மிகவும் சத்துள்ள பல நன்மைகளை தரக்கூடிய உணவு, உலகம் முழுவதும் இந்த தேன் பல்வேறு வகையில் பயன்படுத்தப்படுகிறது. பலர் உணவுகளை தேனை சேர்ப்பதை பாரம்பரியமாக வைத்துள்ளனர். அதில் அடங்குள்ள அதிகமான மருத்துவ குணங்களால் தேன் ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கியமான பங்கை வகிக்கிறது.
தேன் சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நம் உடலுக்கு வைட்டமின் கள் ஏ, பி, சி, கால்சிம், இரும்பு சத்து, ஐயோடின் போன்ற சத்துக்களை நம் உடலுக்கு அளிக்கிறது. இதனால் இது பல நோய்களை எதிர்த்து போராடும்தன்மை கொண்டது. இந்த தேன்கள் எல்லாம் தேனீக்களிடமிருந்து நமக்கு கிடைக்கிறது. தேனீக்கள் பூக்களிலிருந்து தேனை பெற்று ஒரு இடத்தில் சேமிப்பது மூலம் நமக்கு தேன் கிடைக்கிறது.
இந்த தேன்கள் எல்லாம் பெரும்பாலும் பிரெளன் நிறத்திலேயே இருக்கும். ஆனால் வெகு சிலருக்கு தான் நீல நிறத்திலும் தேன் இருக்கும் என்பது தெரியும், ஆம் தேனீக்கள் சில நேரங்களில் நீல நிற தேன்களை சேகரிக்கும். அப்படி நீல நிற தேன்களை சேகரிக்கும் தேனீகளை பற்றி தான் நம் இங்கு காணப்போகிறோம்.
இந்த நீல நிற தேன்கள் முதன்முதலில் கடந்த 2012ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள ரிபூவேலி பகுதியில் தான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்பகுதியில் ஒருவர் தேனீக்களை வளர்த்து வந்துள்ளார். திடீரென அந்த தேனீக்கள் நீல நிற தேன்களை சேகரிக்க துவங்கிவிட்டன.
இதையடுத்து அந்த தேனீக்களை வளர்த்தவர் நீல நிற தேன்கள் வருவதற்கா காரணத்தை ஆய்வு செய்ய துவங்கினார். சில மாத காலம் ஆய்வு செய்த பின்பு தான் அதற்கான உண்மையான காரணம் தெரியவந்தது. அந்த பகுதிக்கு அருகில் உளு்ள பயோகேஸ் செடியின் கழிவுகளில் இந்த தேனீக்கள் தங்கள் உணவை தேடுவதால் அந்த தேன்களின் நிறம் நீல நிறமாக மாறியது தெரியவந்தது.
இதே போல அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலும் இப்படியாக தேனீக்கள் நீல நிற தேன்களை சேரிக்கத்தன. அதன் பின் உள்ள காரணத்தை ஆய்வு செய்த போது அவை நீல மரகந்த பூக்களிலிருந்து தேனை சேகரிப்பதால் அந்த நிற தேன்கள் வந்தது தெரியவந்தது.
இது மட்டுமல்ல செயற்கை முறையிலும் சாதாரண தேனை நீல நிற தேனாக மாற்றும் தொழிற் நுட்பமும் உள்ளது. சாதாரண தேனில் காளை கலக்கும் போது ஒது நீலமும், பிரெளனும் கலந்த தேனாக மாறும். இந்த நீலநிறத்தேன் அதன் தன்மையை பொறுத்தே விஷம் உள்ளதா, அல்லது உடலுக்கு நன்மையுள்ளதா என்பதை அறிய முடியும்