தென் ஆபிரிக்காவில் கொவிட் பெருந்தொற்றின் 3வது அலை தொடங்கியிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்க சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, ஆப்பிரிக்கக் கண்டத்தில் இதுவரை 40 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
ஆபிரிக்கக் கண்டத்தைப் பொறுத்தவரை தென் ஆபிரிக்கா, மொராக்கோ, துனிசியா, எத்தியோபியா, எகிப்து ஆகிய நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன. ஆப்பிரிக்காவில் இதுவரை 1.7 சதவீத மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. தென் ஆபிரிக்காவில் கொவிட் 3வது அலை தொடங்கியுள்ளது. இதனால் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,100 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளோம். ஆனால், தடுப்பூசி தட்டுப்பாடு நீடிப்பதால் நிலைமை கவலையளிக்கிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.