இலங்கை

28 சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு!

பல கோரிக்கைகளின் அடிப்படையில் 28 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று காலை வேலைநிறுத்த நடவடிக்கையைத் தொடங்கின.

COVID-19 சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சுகாதார ஊழியர்களுக்கு வசதிகள் வழங்கப்படவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய, வேலைநிறுத்தத்தினால்  COVID-19 சிகிச்சையளிக்கும் விடுதிகள் மற்றும் மருத்துவமனைகளை பாதிக்காது என்று கூறினார்.

மருத்துவர்களைத் தவிர சுமார் 125,000 சுகாதார ஊழியர்கள் வேலைநிறுத்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்று ரத்னபிரிய கூறினார்.

சுகாதார ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகள், பிபிஇ கிட்கள் மற்றும் என் 95 முகக்கவசங்களை வழங்காமை உள்ளிட்ட காரணங்களினால் பணிப்புக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

file:///D:/Downloads/Strike-11.06.2021-Sec%20(1).pdf

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

மேலும் 76,000 ஃபைசர் தடுப்பூசிகள் வந்தன!

Pagetamil

சமூகவலைத்தளங்களில் பெண்களிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

Pagetamil

இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டது உயரழுத்த நீர்த்தாரை பிரயோக வாகனம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!