முக்கியச் செய்திகள்

மிருசுவில் பிள்ளையார் ஆலயத்தை இடித்து விட்டு தலைமறைவான டிப்பர் கைப்பற்றப்பட்டது (CCTV)

கொடிகாமத்திற்கும் மிருசுவிலுக்கும் இடையில், A 9 வீதியில் அமைந்திருந்த பிள்ளையார் ஆலயத்தை உடைத்த டிப்பர் வாகனம் இனம்காணப்பட்டு, பொலிசார் மீட்டனர்.

கடந்த 7ஆம் திகதி இரவு இனந்தெரியாதோரால் ஆலயம் இடிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, அங்கிருந்த சிசிரிவி கமராவை பொலிசார் ஆய்வு செய்த போது, டிப்பர் வாகனமொன்றினால் ஆலயம் இடிக்கப்படும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

ஆலயத்திற்கு அருகில் டிப்பர் வாகனத்தை நிறுத்திய சாரதி, வாகன நடமாட்டமில்லாத சமயத்தில், டிப்பரை பின்னால் செலுத்திஈ ஆலயத்தை உடைத்து விட்டு அங்கிருந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இந்த காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை நடத்திய பொலிஸ், இராணுவ புலனாய்வாளர்கள் டிப்பரை அடையாளம் கண்டுள்ளனர்.

இன்று டிப்பர் மீட்கப்பட்டது. சாரதியை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
2
+1
3
+1
1
+1
4
+1
1
+1
1
+1
3

Related posts

மேலும் பல இடங்கள் தனிமைப்படுத்தப்படுகின்றன!

Pagetamil

ஒட்டோமான் பேரரசின் ஆர்மீனிய படுகொலையை இனப்படுகொலையாக அறிவித்தது அமெரிக்கா: 1915 இல் நடந்தது என்ன?

Pagetamil

நிலாவறையில் தொல்பொருள் திணைக்களம் மீண்டும் அகழ்வு?: திடீர் பதற்றம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!