இலங்கை

மன்னாரில் மேலும் 20 பேருக்கு தொற்று!

மன்னார் மாவட்டத்தில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனைகளின் போது 20 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று வெள்ளிக்கிழமை (11) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனை முடிவுகள் நேற்று வியாழன் மற்றும் இன்று வெள்ளி ஆகிய இரு தினங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.இதன் போது 20 கொரோனா தொற்றாளர்கள் மன்னார் மாவட்டத்தில் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்ற போதும்,ஏனைய 19 நபர்களும் கடந்த வெள்ளிக்கிழமை பனங்கட்டிக்கொட்டு மற்றும் எமில் நகர் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட 412 பீ.சி.ஆர்.பரிசோதனையின் அடிப்படையில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் சேர்த்து சமூகத்தில் நாள் ஒன்றிற்கு 4 நபர்கள் வீதம் இம்மாதம் 46 நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இம்மாதம் 1784 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, மொத்தமாக 18 ஆயிரத்து 808 பீ.சி.ஆர். பரிசோதனைகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொது மக்கள் தொடர்ந்தும் கூகாதார நடைமுறைகளை பின்பற்றி தொற்று நோயில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.மாவட்டத்திற்கான சமூக தடுப்பூசி வழங்கல் நடவடிக்கை வெகு விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவுடன் இணைந்து நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றோம்.

கடந்த வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அதிகமாக கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு தொற்று உள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளமையினால் மீன் வாடிகளிலும் நெருக்கமாக இருந்து தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமையினால் சுகாதார நடை முறைகளை உரிய முறையில் கடை பிடித்து தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

மன்னார் ஆயர்- சுரேன் ராகவன் எம்.பி சந்திப்பு!

Pagetamil

28 சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு!

Pagetamil

முல்லைத்தீவு மாவட்டத்தில் பயணக்கட்டுப்பாடு மீறப்பட்டு தேவையற்ற விடயங்கள் இடம்பெறுகின்றன; நடவடிக்கை எடுக்கவேண்டும் -ரவிகரன்

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!